உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாரணர் முகாம் துவக்கம்

சாரணர் முகாம் துவக்கம்

புதுச்சேரி : கொடாத்தூர் அரசு நடுநிலைப் பள்ளி சாரணர் படையின் 2 நாள் முகாம் நடந்தது. முகாமை தலைமையாசிரியர் சண்முகம் துவக்கி வைத்து பேசினார். சாரணர் இயக்க ஆணையர் கிருபாகரன், இணை ஆணையர் பத்மநாபன் ஆகியோர், சாரணர்களுக்கான பாடத்திட்டங்கள், மாநில விருது, தேசிய விருது பெற உதவும் பயிற்சிகள் குறித்து விளக்கினர். ஆசிரியர் செந்தில்குமார் வாழ்த்திப் பேசினார். சாரண ஆசிரியை மஞ்சுளா நன்றி கூறினார். மாநிலப் பயிற்சி ஆணையர் சவுண்டப்பன் தலைமையில், ஆசிரியர் சசிக்குமார், சாரண ஆசிரியர் பாலசுப்ரமணியன், வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். நிறைவு விழாவில், சாரண மாணவர்களுக்கு, தலைமையாசிரியர் சண்முகம் பரிசு வழங்கி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி