| ADDED : செப் 01, 2011 01:32 AM
புதுச்சேரி : புதுச்சேரி ரோட்டரி காஸ்மாஸ், கல்வி மாவட்டக் கிளை சார்பில் திருச்சிற்றம்பலம் காந்தி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் திறனை ஊக்குவிக்கும் பொருட்டு கலை மற்றும் இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டன. ரோட்டரி காஸ்மாஸ் தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாகி ஆனந்தன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் ஜனார்த்தனன் வரவேற்றார். மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், நடனம், வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு காஸ்மாஸ் தலைவர் ராஜன் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். ரோட்டரி காஸ்மாஸ் நிர்வாகிகள் முன்னாள் ஆளுநர் ஜோசப் சுரேஷ்குமார், செயலாளர் அருள் இளங்கோ, திட்ட அலுவலர் பாலமுரளி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். தமிழாசிரியர் வைஜெயந்தன் நன்றி கூறினார்.