உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி புதுச்சேரி வீரருக்கு வெண்கலம்

சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி புதுச்சேரி வீரருக்கு வெண்கலம்

புதுச்சேரி: உஸ்பெகிஸ்தான், தாஷ்கண்டில் நடந்த 4 வது ஐ.சி.சி.டி- ஆசிய தனிநபர் காது கேளாதோர் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் புதுச்சேரி வீரர் வெண்கலப் பதக்கம் வென்றார். ஆசிய தனிநபர் காது கேளாதோர் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி, உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் கடந்த செப்டம்பர் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடந்தது. இப்போட்டியில் பங்கேற்ற புதுச்சேரி வீரர் ரோஷன் வெண்கலப் பதக்கம், மற்றும் பங்கேற்பு சான்றிதழை பெற்றார். வெற்றி பெற்ற ரோஷன் முதல்வர் ரங்கசாமியை சட்டசபையில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, காது கேளாதோர் விளையாட்டு மன்ற பொதுச்செயலர் பாசித், தொழில்நுட்ப இயக்குநர் சதுரங்கம் சத்தியபுவனம், பயிற்சியாளர் வசந்தகுமார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை