தென்மண்டல ராக்கெட் பால் போட்டி புதுச்சேரி வீரர்களுக்கு தங்கப்பதக்கம்
புதுச்சேரி : தமிழகத்தில் நடத்த தென் மண்டல நேஷனல் ராக்கெட் பால் போட்டியில் புதுச்சேரி வீரர்கள் 3 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.முதல் தென் மண்டல நேஷனல் ராக்கெட் பால் போட்டி சேலத்தில் நடந்தது. அதில் புதுச்சேரியை சேர்ந்த வீரர்கள் வீராங்கனைகள் எட்டு பேர் கலந்து கொண்டனர். சிங்கிள்ஸ், டபுள்ஸ் மற்றும் மிக்சர் டபுள்ஸ் பிரிவுகளில் முறையே 3 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 1 வெண்கலப் பதக்கம் என, மொத்தம் ஏழு பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.புதுச்சேரிக்கு திரும்பிய வீரர்கள் கல்வித்துறை மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து ஆசி பெற்றனர். அமைச்சர் நமச்சிவாயம் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். புதுச்சேரி ராக்கெட் பால் அசோசியேஷன் செயலாளர் எழில் ராஜன், தலைவர் ஜான் அம்ப்ரோஸ், மேலாளர் சிவக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.