உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கூச் பெஹார் கோப்பை கிரிக்கெட் போட்டி வலுவான நிலையில் புதுச்சேரி அணி

கூச் பெஹார் கோப்பை கிரிக்கெட் போட்டி வலுவான நிலையில் புதுச்சேரி அணி

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்து வரும் கூச் பெஹார் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் வலுவான நிலையில் புதுச்சேரி அணி உள்ளது.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய 19 வயதிற்குட்பட்ட ஆடவருக்கான கூச் பெஹார் கோப்பைக்கான லீக் போட்டிகள் முடிந்து, முதல் இடம் பிடித்த புதுச்சேரி அணியும், இரண்டாம் இடம் பிடித்த திரிபுரா அணிக்கான இறுதிப்போட்டி, கடந்த 14ம் தேதி புதுச்சேரி சி.ஏ.பி., கேப் மைதானம் 2ல் துவங்கியது.கடந்த 15ம் தேதி நடந்த 2ம் நாள் ஆட்டத்தில் 150 ரன்கள் இருந்த நிலையில் ராகவன் ஆட்டம் இழந்தார். 72 ரன்களில் பிரதீஷ் ராம் ஆட்டம் இழந்தார். இருவரும் இணைந்து 203 ரன்கள் அடித்தனர். மேலும் ஸ்ருஜன் 51 ரன்கள் எடுத்தார். புதுச்சேரி அணி தனது முதல் இன்னிங்சில் 364 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது.தொடர்ந்து ஆடிய திரிபுரா அணி இரண்டாம் நாள் ஆட்ட இறுதியில் 2 விக்கெட் இழந்து 89 ரன்கள் எடுத்து 275 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் திரிபுரா அணி 187 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. புதுச்சேரி அணியின் சூர்ஜன் 5 விக்கெட் எடுத்தார்.177 ரன்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிய புதுச்சேரி அணி ஆட்ட நேர இறுதியில் 2 விக்கெட் இழந்து 208 ரன்கள் எடுத்து 385 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. முதல் இன்னிங்சில் சதம் அடித்த ராகவன் இரண்டாம் இன்னிங்கின்சிலும் சதம் அடித்து 114 ரன்களில் ஆட்டம் இழக்காமல் உள்ளார். நான்காம் நாள் ஆட்டம் மட்டுமே உள்ள நிலையில் புதுச்சேரி அணிக்கு கோப்பை உறுதியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை