சர்வதேச கராத்தே போட்டி புதுச்சேரி அணி வெற்றி
புதுச்சேரி : சர்வதே ச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில், புதுச்சேரி செய்கோ காய் கராத்தே அணி பரிசு பெற்று சாதனை படைத்தது. த மிழ்நாடு உடுமலைப்பேட்டையில் 4வது சர்வதேச காரத்தே போட்டி நடந்தது. போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநில வீரர்கள் கலந்து கொண்டனர். அதில், பரிசு வென்ற புதுச்சேரி செய்கோ காய் கராத்தே வீரர்களை, சங்க தலைவர் செய்கோ காய் கராத் தே சங்கத் தலைவர் கிறிஸ்டிராஜ், துணை முதல்வர் ஆரோக்கியதாஸ், பிரசிடென்சி பள்ளி (எலைட்) செயலாளர் கவுதம், சங்கத் துணைத் தலைவர்கள் கியோஷி, ஞானசேகரன், பொதுச் செயலாளர் விஸ்வசுந்தரம் ஆகியோர் பாராட்டினர். பயிற்சி யாளர்கள் ஏகாம்பரம், அருள்ராஜ், பாரத், திரிஷாந்த் சந்திரபூஷன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.