மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி புதுச்சேரி அணி அபார வெற்றி
புதுச்சேரி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் 19 வயதிற்குட்பட்ட மகளிருக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.இந்துார் நகரில் நேற்று நடந்த போட்டியில் புதுச்சேரி அணியும், மணிப்பூர் அணியும் மோதின. முதலில் பேட் செய்த புதுச்சேரி அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் எடுத்தது. புதுச்சேரி அணியின் சன்ஜியா 73 ரன், நிஷா 62 ரன் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய மணிப்பூர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழந்து 116 ரன்கள் எடுத்தது. புதுச்சேரி அணியின் ஸ்ரீ வர்ஷினி 3 விக்கெட் எடுத்தார். புதுச்சேரி அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.