உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாணவர்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்: புதுச்சேரி பல்கலைகழகம் அறிவிப்பு

மாணவர்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்: புதுச்சேரி பல்கலைகழகம் அறிவிப்பு

புதுச்சேரி: மாணவர்களின் கோரிக்கை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து புதுச்சேரி பல்கலைகழக மக்கள் தொடர்பு பிரிவு துணை பதிவாளர் மகேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: பல்கலைகழக வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் சுத்திகரிப்பு இயங்திரங்கள் அமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறது. மதர்தெரசா மெஸ் புதுபிப்பு பணிகள் முடிந்ததும் அங்கும் இதேபோன்ற சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்படும். மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சிறந்த தொலைத்தொடர்பு வசதி கிடைக்க புதிதாக இரண்டு மொபைல்போன் டவர்கள அமைக்க திட்டப்பட்டுள்ளது. மேலும் சி.எஸ்.ஆர்., நிதிமூலம் ஐந்து புதிய கழிப்பறைகள் பல்வேறு இடங்களின் அமைக்கப்பட்டுள்ளன. ஓபன் ஏர் தியேட்டர், சயின்ஸ் பிளாக் மற்றும் லாஸ்பேட்டை சமுதாய கல்லுாரியில், மூன்று புதிய கழிப்பறைகள் அமைக்கபட உள்ளன. தற்போதுள்ள இரண்டு பல்கலைகழக பஸ், ஒரு குத்தகை பஸ் மற்றும் மின்சார வாகனத்துடன், கூடுதலாக ஒரு பஸ் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களின் பிரச்னைகள் மற்றும் குறைகளை தீர்க்க பல்கலைகழக நிர்வாகம் உறுதியாக உள்ளது. மாணவர்கள் பிச்னைகளுக்கு தீர்வு காண நேரடி, சம்பந்தப்பட மாணவர் குழுவினரை பல்கலைகழக நிர்வாகம் பலமுறை கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளது. மாணவர்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் தங்கள் குறைகளை அதிகாரப்பூர்வ மற்றும் உரிய வழிகள் மூலம் தெரிவிக்க வேண்டும். விதிமுறைகளுக்கு உட்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி