உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தேசிய பளு துாக்கும் போட்டியில் புதுச்சேரி வீராங்கனை சாதனை

தேசிய பளு துாக்கும் போட்டியில் புதுச்சேரி வீராங்கனை சாதனை

புதுச்சேரி : தேசிய அளவிலான பளு துாக்கும் போட்டியில், வெண்கல பதக்கம் வென்று புதுச்சேரி வீராங்கனை ஹர்ஷிகா சாதனை படைத்தார். ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் தேசிய அளவிலான பளு துாக்கும் போட்டி கடந்த 6ம் தேதி துவங்கி 12ம் தேதி வரை நடந்தது. இதில், புதுச்சேரி, தமிழ்நாடு. கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சார்ந்த ஆண்கள், பெண்கள் பலர் கலந்து கொண்டனர். இப்போட்டியில், சப் ஜூனியர் பெண்கள் பிரிவில் புதுச்சேரி மாநிலம் சார்பில் பங்கேற்ற ஹர்ஷிகா, 64 கிலோ எடை பிரிவில், வெண்கல பதக்கம் வென்றார். இவர், ஸ்நட்ச் (snatch) முறையில் 80 கிலோ, கிளீன் அண்ட் ஜர்க் முறையில் 98 கிலோ, என மொத்தமாக 178 கிலோ எடை துாக்கி வெண்கல பதக்கம் வென்று புதுச்சேரிக்கு பெருமை சேர்த்தார்.தேசிய அளவிலான போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற ஹர்ஷிகாவிற்கு, புதுச்சேரி மாநில பளு துாக்கும் சங்க செயலாளர், தலைவர், நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை