உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரதமர் விழாவில் குளறுபடி 11 போலீசாருக்கு பனிஷ்மென்ட்

பிரதமர் விழாவில் குளறுபடி 11 போலீசாருக்கு பனிஷ்மென்ட்

காரைக்காலில் கட்டப்பட்டுள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லுாரி வளாக திறப்பு விழா கடந்த 25ம் தேதி நடந்தது. இதில் கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர்.பிரதமர் நரேந்திர மோடி 'வீடியோ கான்பிரன்ஸ்' மூலமாக பங்கேற்று 67.33 ஏக்கரில் ரூ. 491 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கல்லுாரி கட்டடம், விடுதிகள் மற்றும் குடியிருப்புகளை திறந்து வைத்தார்.சீனியர் எஸ்.பி., மனீஷ் தலைமையில் எஸ்.பி.,க்கள் சுப்ரமணி, நித்தின் கவுல் ரமேஷ், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.விழாவில் அரசு அதிகாரிகள், பா.ஜ., - என்.ஆர். காங்., கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டனர். விழா அரங்கின் மேடை எதிரில் அமைக்கப்பட்டிருந்த வி.ஐ.பி., இருக்கையில், காரைக்காலுக்கு வி.ஐ.பி.,க்கள் வரும்போது, எடுபிடி வேலை செய்யும் ரவுடி ஒருவர் அமர்ந்திருந்தார்.குற்ற வழக்கில் உள்ள பலரும் விழா அரங்கில் வி.ஐ.பி.,க்கான இருக்கையில் அமர்ந்திருந்தனர்.இது, அரசு விழாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. வி.ஐ.பி., இருக்கையில் குற்ற பின்னணி கொண்டவர்களை எப்படி அமர வைத்தீர்கள் என போலீசாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.பிரதமர் பங்கேற்ற விழாவில், வி.ஐ.பி., இருக்கை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 11 போலீசாருக்கு 'பனிஷ்மென்ட்' வழங்க சீனியர் எஸ்.பி., உத்தரவிட்டார். 11 போலீசாரும் நேற்று காலை காரைக்கால் உள்விளையாட்டு அரங்கிற்கு வரவழைக்கப்பட்டனர்.துப்பாக்கி ஏந்திய 11 போலீசாருக்கும் காலை 5:00 மணி முதல், காலை 7:30 மணி வரை தொடர்ச்சியாகஓட்டம், தாவி குதித்து செல்லுதல் உள்ளிட்ட பல 'பனிஷ்மென்ட் பரேட்' நடத்தப்பட்டது.'பனிஷ்மென்ட் பரேட்' முடிந்த பிறகே தங்களுக்கு எதற்காக பரேட் நடத்தப்பட்டது என போலீசாருக்கு தெரிய வந்தது. பாதுகாப்பு பணியின்போது எங்களுடன்நின்றிருந்த உயர் அதிகாரிகளுக்கு யார் 'பனிஷ்மென்ட்' கொடுப்பது எனபுலம்பியவாறு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ