மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
4 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
4 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
5 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
5 hour(s) ago
புதுச்சேரி : பெரும்பாலான அரசு, தனியார் பள்ளிகளில் நேற்று திடீரென மாணவர்கள் ஒருவரையொருவர் கன்னத்தில் அறைந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நேற்று வினோதமான பழக்கம் ஒன்று திடீரென பரவியது.ஒருவரையொருவர் கன்னத்தில் அறைந்து கொண்டு துள்ளி குதித்தனர். ஒன்றுமே புரியாத மாணவர்கள் எதற்கு அடித்தாய் என்று எதிர்த்து சண்டைக்குபோக பல பள்ளிகளில் பெரிய களோபரமே நடந்து பள்ளிகளில் பஞ்சாயத்தும் அரங்கேறியது.அறைந்த மாணவர்களை அழைத்து பள்ளி முதல்வர்கள் காரணம் கேட்க,அப்போது அவர்கள், சார்,இன்னைக்கு உலகம் முழுவதும் ஹாப்பி சிலாப் டே கொண்டாடப்படுகின்றது.அதனைால் சும்மா ஜாலிக்காக கன்னத்தில் அடித்தோம்.வேறு ஒன்று இல்லை என்று கூறினர். அதை கேட்டு ஷாக்கான பள்ளி முதல்வர்கள் கன்னத்தில் அறைந்த மாணவர்களிடம் கடுமையாக எச்சரித்துள்ளார்.ஹாப்பி சிலாப் டே குறித்து கூறுகையில், காதலர்கள் தினம் 14ம் தேதி கொண்டாடப்பட்டாலும்,பிப்ரவரி 7 ம்தேதியே களை கட்ட துவங்கிவிடும்.அதேபோன்று காதலர் தினம் முடிந்த 15ம் தேதி பிறகு காதலர் எதிர்ப்பு தினம் 15ம் தேதி முதல் 21ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.இந்த வாரத்தில் ஹாப்பி ஸ்லாப் டே, கிக் டே, பெர்ப்யூம் டே, பிளார்ட் டே, கன்பெஷன் டே, மிஸ்ஸிங் டே, பிரேக்கப் டே என உள்ளது.அதில் ஒன்று தான் ஹாப்பி ஸ்லாப் டே. அறைதல் நாள் என்று கூறப்படும் ஸ்லாப் டே காதல் எதிர்ப்பு வாரத்தின் முதல் நாளாக உள்ளது. இந்த நாளில் தங்களை ஏமாற்றிய, துயரத்தில் ஆழ்த்த வைத்த, இதயத்தை நொறுக்கிய, தவறுதலாக நடந்து கொண்ட முன்னாள் காதலர்கள் அல்லது நபர்களின் பழைய கசப்பான நினைவுகளை உதறுவது தான் சிலாப் டேவின் அர்த்தம்.யாரையும் கன்னத்தில் அடிப்பது இல்லை. எனவே அர்த்தம் தெரியாமல் இதுபோன்று சக மாணவர்களை சிலாப் டே கொண்டாடி அடிக்க கூடாது என்று அட்வைஸ் செய்தனர். உண்மையை உணர்ந்த சிலாப் டே கொண்டாடிய மாணவர்கள்,அசடு வழிந்தபடி தங்களுடைய தவறுக்கு சக மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago