உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளியில் பொம்மலாட்டம் நிகழ்ச்சி

அரசு பள்ளியில் பொம்மலாட்டம் நிகழ்ச்சி

புதுச்சேரி : புதுச்சேரி சவராயலு அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பொம்மலாட்டம் நிகழ்ச்சி நடந்தது.எக்கோ கிளப் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியை இந்திரகுமாரி தலைமை தாங்கினார்.பள்ளி ஓவிய ஆசிரியர் ரவி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பளராக புதுச்சேரி வர்த்தக சபை பொருளாளர் ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு நடன பயிற்சி அளிக்கப்பட்டது.ஏற்பாடுகளை பிரபு, உடற்கல்வி ஆசிரியர் சரவணன், மகேந்திரன், மதியழகன் செய்திருந்தார்.பரசுராமன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ