| ADDED : பிப் 11, 2024 10:37 PM
புதுச்சேரி: புதுச்சேரி மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சுதேசி மில் அருகே மாநில மாநாடு நடந்தது.மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இயக்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் சூடாமணி வரவேற்றார். மாநில தலைவர் கார்த்திகேயன், உறுப்பினர் ஜோசப் அந்தோணி, சமூக மேம்பாட்டு சங்க தலைவர் ஜான்பீட்டர் ஆகியோர் பேசினர்.செந்தில்குமார் எம்.எல்.ஏ., வாழ்த்தி பேசினார்.மாநாட்டில் அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீத இடஒதுக்கீடும், கல்வி, நலத்திட்டங்கள் வழங்குவதில் 5 சதவீதம் இடஒதுக்கீடும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும். 15 கிலோ இலவச அரிசியை 30 கிலோவாக உயர்த்தி வழங்க வேண்டும்.வருமான உச்சவரம்பை முற்றிலுமாக நீக்க வேண்டும். சுய தொழில் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். இலவச மனைப்பட்டா, தொகுப்பு வீடு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.