உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வீடுகளில் குப்பைகளை முறையாக சேகரிக்க கியூ.ஆர்.கோடு : பாகூர் பகுதியில் துவக்கம்

வீடுகளில் குப்பைகளை முறையாக சேகரிக்க கியூ.ஆர்.கோடு : பாகூர் பகுதியில் துவக்கம்

பாகூர்: சேலியமேடு கிராமத்தில் குப்பைகள் சேகரிப்பை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு வீட்டிற்கும் தனி அடையாள கியூ.ஆர். கோடு வழங்கும் பணியை, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம் துவக்கி வைத்தார்.புதுச்சேரி உள்ளாட்சி துறை சார்பில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட கிராமங்களில், ஹெச்.ஆர். ஸ்கொயர் என்ற தனியார் நிறுவனத்தின் மூலமாக, குப்பைகள் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, குப்பைகள் அகற்றும் பணியை கண்காணிக்கும் வகையில், ஒவ்வொரு வீடுகளுக்கும் தனி அடையாள கியூ.ஆர்.கோடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.முதற்கட்டமாக, சேலிய மேடு கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு தனி அடையாள கியூ.ஆர். கோடு வழங்கும் பணியை, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம் நேற்று துவக்கி வைத்தார். ஹெச்.ஆர். ஸ்கொயர் பொது மேலாளர் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர். இதன் மூலமாக, துப்புறவு பணியாளர் எந்த ஒரு வீட்டில் குப்பைகளை சேகரிக்கும் போதும், அந்த வீட்டின் வெளியே ஒட்டப்பட்டு இருக்கும் கியூ.ஆர். கோட்டினை மொபைல் போன் மூலமாக ஸ்கேன் செய்து, நிர்வாக தலைமைக்கு தகவல் தெரிவித்தாக வேண்டும்.இதன் மூலம், அனைத்து வீடுகளிலும் குப்பைகள் சேகரிப்பு பணி முறையாக நடைபெறுகிறதா என்பதை, அந்த நிறுவனம் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கும்.அதேபோல், பொது மக்களும், தங்கள் வீட்டில் துப்புறவு பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்கவில்லை என்றால், அந்த கியூ.ஆர். கோடு ஸ்டிக்கரில் உள்ள டோல்பிரி எண்ணில் கால் செய்தும், அல்லது வாஸ்ட் ஆப்பில் புகார் தெரிவிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை