உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராதா மாதவ திருக்கல்யாணம்

ராதா மாதவ திருக்கல்யாணம்

புதுச்சேரி: புதுச்சேரி தர்ம சம்ரக் ஷன் சமிதி சார்பில், 6ம் ஆண்டு ராதா மாதவ திருக்கல்யாண மகோற்சவம் லாஸ்பேட்டை இ.சி.ஆர்., சாலையில் உள்ள விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் நேற்று துவங்கியது.இதையொட்டி, காலை 8:30 மணிக்கு கணபதி பூஜை, தோடய மங்களம், குரு கீர்த்தனை, அஷ்டபதி பஜனை, மதியம் 2:00 மணிக்கு அஷ்டபதி பஜனை, பஞ்சபதி உபசார கீர்த்தனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு கலைமாமணி கல்யாணராமன் பாகவதர் தலைமையில், திவ்யநாம சங்கீர்த்தனம் பஜனை நடந்தது. இன்று காலை 9:00 மணிக்கு ராதா மாதவ திருக்கல்யாண மகோற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !