மேலும் செய்திகள்
இன்று இனிதாக - திருப்பூர்
25-Dec-2024
புதுச்சேரி புதுச்சேரியில் ராதா மாதவ திருக்கல்யாண மகோற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.புதுச்சேரி, சித்தன்குடி, ஜெயராம் கல்யாண மண்டபத்தில், வேதபாரதி சார்பில், ராதா மாதவ திருக்கல்யாண மகோற்வசம் நேற்று துவங்கியது. விழாவில் பெண், மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, காலை 8:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வேத பாராயணம் நடந்தது.காலை 10:30 மணிக்கு நாம சங்கீர்த்தனம், மாலை 4:30 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாமம், மகா மந்தர அகண்ட பாராயணம் நடந்தது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு அஷ்டபதி, தரங்கம், பஞ்சபதி, கணேசாதி தியானம், பூஜை, திவ்ய நாமம் நடைபெற்றது. இன்று 12,ம் தேதி காலை 6:00 மணி முதல் மார்கழி மாத பஜனை, உஞ்சவ்ருத்தி, திவ்ய நாமம், அஷ்டபதி, ராதா மாதா திருக்கல்யாணம், ஆஞ்சநேயர் உற்சவம், மங்கள ஆரத்தி நடக்கிறது. விழாவில் கடையநல்லுார் ராஜகோபால்தாஸ் பாகவதர் மற்றும் அவரது குழுவினர் பங்கேற்றனர்.
25-Dec-2024