உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மழைநீர் வடிகால் துார் வாரும் பணி

மழைநீர் வடிகால் துார் வாரும் பணி

அரியாங்குப்பம்: கடலுார் ரோடு, நாணமேட்டில் அடைப்பு ஏற்பட்ட மழை நீர் வடிகால் துார் வரப்பட்டது. வடக்கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டதை அடுத்து புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. தவளக்குப்பத்தில் பெய்த மழையில், நாணமேடு கிராம பகுதியில் செல்லும் மழை நீர் வாய்க்காலில், ஆகாயத்தாமரைகள், குப்பைகள் அடைத்து இருந்தது. அதனால், மழை நீர் செல்ல முடியாமல், சாலையில், தண்ணீர் தேங்கி நின்றது. தொடர்ந்து, சபாநாயகர் செல்வம் மேற்பார்வையில், ஜே.சி.பி., மூலம், வாய்க்காலை துார் வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும், தவளக்குப்பம் பகுதியில் வாய்க்கால்கள் துார் வாரும் பணி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை