உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜாமினில் வந்தவர் மீண்டும் கைது

ஜாமினில் வந்தவர் மீண்டும் கைது

வடலுார்: ஜாமினில் வெளிவந்து, வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டையை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் பிரபு, 35; வன்கொடுமை தடுப்பு பிரிவு வழக்கில் கைதான இவர், ஜாமினில் வெளியே வந்தார். பின்னர் அவர் வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். அதனைத் தொடர்ந்து நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. அ தன் பேரில், தலைமறைவாக இருந்த பிரபுவை குறிஞ்சிப்பாடி போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ