உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஊரில் நுழைய ரவுடிக்கு தடை விதிக்க பரிந்துரை 

ஊரில் நுழைய ரவுடிக்கு தடை விதிக்க பரிந்துரை 

திருக்கனுார், ; சோரப்பட்டு பகுதியில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு ரவுடி ஊரில் நுழைய தடை விதிக்கக் கோரி, கலெக்டருக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.திருக்கனுார் அடுத்த சோரப்பட்டு, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தமிழ்வாணன், 39. ரவுடியான இவர் மீது பல்வேறு அடிதடி, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.இந்நிலையில், ரவுடி தமிழ்வாணனால் லோக்சபா தேர்தலில், சோரப்பட்டு பகுதியில் பிரச்னை ஏற்படாமல் இருப்பதற்காக, அவரை ஊரில் நுழைய தடை விதிக்கக்கோரி, திருக்கனுார் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார், கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ