உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தடையை மீறி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்

தடையை மீறி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்

புதுச்சேரி : புதுச்சேரியில் தடையை மீறி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றும் பணி நடந்தது.புதுச்சேரியில் தடையை மீறி போக்குவரத்து சிக்னல், முக்கிய சந்திப்புகள், தெருக்கள் என அனைத்து இடங்களில் பேனர் வைக்கின்றனர். புதுச்சேரி தலைமை நீதிபதி சந்திரசேகரன் நேரடியாக தலையிட்டு, உடனடியாக பேனர்கள், ஹோர்டிங், கட்அவுட், பிளக்ஸ் போர்டு உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும். மீறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என கலெக்டர், தலைமை செயலருக்கு கடிதம் எழுதினார்.இதைத் தொடர்ந்து புதுச்சேரி முழுதும் இருந்த பேனர்கள் அகற்றப்பட்டன. அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் ஆங்காங்கே பேனர் வைத்தனர். முத்தியால்பேட்டை அஜந்தா சிக்னல், இ.சி.ஆர்., உள்ளிட்ட இடங்களில் திருமண வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டன. இதை அறிந்த பொதுப்பணித்துறை மத்திய கோட்ட பிரிவினர், முத்தியால்பேட்டை, ஆனந்தா திருமணம் மண்டபம், செஞ்சி சாலை, 45 அடி சாலை, ரயில்நிலையம் அருகில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களை அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ