உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோட்டைமேட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்

கோட்டைமேட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்

வில்லியனுார்: வில்லியனுார் கோட்டைமேடு பகுதியில் நேற்று இரவு ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.வில்லியனுார் நான்கு மாட வீதி சாலைகளில், கழிவுநீர் வாய்க்காலை தாண்டி, சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் மற்றும் வீடுகளின் கார் பார்க்கின் உள்ளிட்டவை அமைத்திருந்தனர்.சாலையில் நடைபாதை கடைகள், இரு புரங்களிலும் பைக்குகள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்துவதால் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டு வந்தது.கடந்த சில தினங்களுக்கு முன், சப் கலெக்டர் உத்தரவின்பேரில், பொதுப்பணித்துறை மற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள், போலீசார் முன்னிலையில் மாட வீதிகள், சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.அதனை தொடர்ந்து நேற்று மாலை துவங்கி இரவு வரையில் கோட்டைமேடு முதல் பைபாஸ் வரையில் சாலையில் இருபுரம் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனால் சாலைகள் அகலமாகவும் 'பளீச்' என்று உள்ளது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை