உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெண்ணுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை புதுச்சேரி அரசு மருத்துவமனை மருத்துவ குழு அசத்தல்

பெண்ணுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை புதுச்சேரி அரசு மருத்துவமனை மருத்துவ குழு அசத்தல்

புதுச்சேரி : புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் 37 வயது பெண்ணுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.இந்திராகாந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில் புதுச்சேரி, தமிழகத்தை சேர்ந்த நோயாளிகள் ஆயிரக்கணக்கானோர் தினமும் சிகிச்சை பெறுகின்றனர்.மருத்துவமனையை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல புதுச்சேரி அரசு முயற்சி எடுத்து வருகிறது. சென்னை தனியார் மருத்துவமனையுடன் இணைந்து இருதய அறுவை சிகிச்சை செய்து வருகிறது. இதையடுத்து பத்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து அசத்தியுள்ளது.மருத்துவமனை கண்காணிப்பாளர் செவ்வேள் முன்னிலையில் சிறுநீரியல் துறை தலைவர் சுதாகர் தலைமையில் சிறுநீரகத் துறை தலைவர் குமார், மயக்க மருந்து துறை தலைவர் மதன் ஆகியோர் இணைந்து இந்த அறுவை சிகிச்சையை சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனை மூத்த சிறுநீரியல் சிகிச்சை நிபுணர் முத்துவீரமணி, சவீதா பல்கலைக்கழக பேராசிரியர் சிவசங்கர் ஆகியோர் துணையுடன் வெற்றிகரமாக செய்தனர். கண்காணிப்பாளர் செவ்வேள் கூறியதாவது:கதிர்காமம் பகுதியை சேர்ந்த 37வயது பெண்ணின் சிறுநீரகம் பழுதானது. அவர் உயிர் பிழைக்க சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அவசியமானது. இதையடுத்து அப்பெண்ணின் 58 வயது தாய் சிறுநீரகத்தை தானமாக வழங்க முன்வந்தார்.இதையடுத்து சிறுநீரகம் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு வெற்றிகரமாக சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மகளும், தாயும் நலமுடன் உள்ளனர். டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றது. அறுவை சிகிச்சைக்கு பிறகு தேவையான அனைத்து மருந்துகள், மருத்துவ பரிசோதனைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.சிறுநீரக கோளாறினால் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுதும் டயாலிசிஸ் மேற்கொள்ளும் அனைத்து நோயாளிகளுக்கும் இந்த சிகிச்சை வரப்பிரசாதமாகும். இத்தகைய பாதிப்புள்ள நோயாளிகள் சிறுநீரக தானம் தர சம்மதிக்கும் நெருங்கிய உறவினர்களுடன் மருத்துவமனையை அணுகலாம்' என்றார்.

கண்ணீர் மல்க

நன்றிசிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிக்கரமாக நடந்ததும் மறுஉயிர் பெற்ற 37-வயது பெண்மணியும், அவரது தயாரும் மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள் மற்றும் சிறுநீரக மாற்று அறுதவ சிகிச்சை செய்த குழுவினரை சந்தித்து கண்ணீர் மல்க நன்றி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை