உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜிப்மரில் புதுப்பிக்கப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு திறப்பு

ஜிப்மரில் புதுப்பிக்கப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு திறப்பு

புதுச்சேரி : ஜிப்மரில் ரூ. 4.74 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட அவசர மற்றும் விபத்து சிகிச்சைப் பிரிவு திறப்பு விழா நேற்று நடந்தது. மத்திய ஆயுஷ் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் அவசர சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சை பிரிவை திறந்து வைத்தார். கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அரசு கொறடா ஆறுமுகம், ஜிப்மர் இயக்குநர் வீர் சிங் நெகி ஆகியோர் பங்கேற்றனர்.புதிதாக திறக்கப்பட்ட அவசர சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சை பிரிவு, மேம்படுத்தப்பட்ட தீயணைப்பு பாதுகாப்பு அம்சங்களுடன் மத்திய பொதுப்பணித் துறையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. தினசரி 350 முதல் 400 அவசர சிகிச்சை நோயாளிகளை கையாளும் வசதிகள் கொண்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு நோயாளிகள் பராமரிப்பு, செயல் திறன் மற்றும் அவசர கால தயார்நிலை ஆகியவற்றை முக்கிய நோக்கமாக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி