சேதமடைந்த சாலைகளை என்.சி.சி., மாணவர்கள் சீரமைப்பு
திருபுவனை: கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கல்லுாரி என்.சி.சி., தரைப்படை மாணவர்கள் அதேப் பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கல்லுாரி என்.சி.சி., தரைப்படை பிரிவு மாணவர்கள் மதகடிப்பட்டு - திருக்கனுார் சாலையில் கலிதீர்த்தாள்குப்பம் பகுதியில் குண்டும், குழியுமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் கனகவேல் தலைமை தாங்கினார். என்.சி.சி., நோடல் ஆபீசர் லெப்டினன்ட் கதிர்வேல் வரவேற்றார். மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து இளநிலை பொறியாளர் பாஸ்கர் சாலை சீரமைப்பு பணியை தொடங்கி வைத்தார்.கொம்யூன் பஞ்சாயத்து பணி மேற்பார்வையாளர் சச்சிதானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து மாணவர்கள் கலிதீர்த்தாள்குப்பம் மருத்துவக் கல்லுாரிக்கு எதிரே உள்ள குடியிருப்பு பகுதி சாலை பள்ளங்களில் மண் கொட்டி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.