| ADDED : ஜன 14, 2024 06:22 AM
புதுச்சேரி, : புதுச்சேரி ஆதித்யா கல்லுாரி மாணவர்களின் சர்வதேச ஆராய்ச்சி இதழ், தேசிய தொழில் நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட கல்வித் திட்ட தேசிய மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டது.கோயம்புத்துார் இந்துஸ்தான் ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், தேசிய தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட கல்வித் திட்டத்தின் தேசிய மாநாடுநடந்தது. இதில், புதுச்சேரி ஆதித்யா மேலாண்மை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன மாணவர்கள் அக்ஷான், அல்மாஸ், கீர்த்தனா, சேதுராமன், தாட்சாயிணி ஆகியோர் பங்கேற்று, 'ஆராய்ச்சி எண்ணங்களின் சர்வதேச ஆய்வு இதழ்' வெளியிட்டனர்.இந்த ஆய்வு இதழ் தேர்வு செய்யப்பட்டு 'Quantum mastery: Revolutionizing speed and Insight in the digital Era' செய்தித் தாளில் வெளியிடப்பட்டுள்ளது. சிறந்த ஆய்வு இதழ் வெளியிட்ட ஆதித்யா கல்லுாரி மாணவர்களை, கல்லுாரியின் நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்த், வித்ய நாராயண அறக்கட்டளை ட்ரஸ்டி அனுதா பூனமல்லி ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர்.இம்மாணவர்கள் இளங்கலை பட்டப்படிப்பு முதலாமாண்டு பயிலும் போதே டேட்டா சயின்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் தொடர்பான 33 சான்றிதழ் படிப்புகளை முடித்துள்ளனர். மேலும், மைக்ரோசாப்ட், கூகுள், சிஸ்கோ போன்ற நிறுவனங்களின் சான்றிதழ் படிப்புகளை பயின்று வருகின்றனர்.