சமூக அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆராய்ச்சி முறையியல் பயிற்சி நிறைவு
புதுச்சேரி; புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சமூக உள்ளடக்க ஆய்வு மையம், கல்வி மற்றும் மேம்பாட்டு ஆய்வுகள் நிறுவனம் சார்பில், சமூக அறிவியலில் ஆராய்ச்சியாளர்களுக்கான 10 நாள் தேசிய ஆராய்ச்சி முறையியல் பயிற்சி நிறைவு விழா நடந்தது.சமூக உள்ளடக்க ஆய்வு மையத்தின் தலைவர் சிதம்பரம் வரவேற்றார். சமூக உள்ளடக்க ஆய்வு மைய இயக்குநர் பிரபாகரன், பயிற்சியின் அமைப்பு மற்றும் உள்ளடக்கம் குறித்து அறிக்கையை வழங்கினார். பத்து நாள் நடந்த பயிற்சியில் உயர்தர சமூக அறிவியல் ஆராய்ச்சிக்குத் தேவையான வழிமுறை கருவிகள், பகுப்பாய்வு கட்டமைப்புகள், இளம் ஆராய்ச்சியாளர்களை சித்தப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அமர்வுகள் இடம்பெற்றன.சமூக அறிவியல் மற்றும் சர்வதேச ஆய்வுகள் பள்ளியின் டீன் சந்திரிகா, சமூக ரீதியாக பொருத்தமான ஆராய்ச்சிகளின் உறுதிப்பாட்டைப் பராமரிக்க அறிஞர்களை வலியுறுத்தினார். பல்கலைக்கழக பதிவாளர் ரஜ்னீஷ் பூதானி, ஆராய்ச்சிக்கான பல்துறை மற்றும் காலனித்துவ நீக்க அணுகுமுறைகளின் அவசியத்தை எடுத்துரைத்தார்.பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பிரகாஷ் பாபு, சமகால சமூக சவால்களை எதிர்கொள்வதிலும், முற்போக்கான கொள்கை வகுப்பில் பங்களிப்பதிலும் சமூக அறிவியல் ஆராய்ச்சியின் முக்கியத்துவம் குறித்தும், அமர்வுகளின் தரம், வளநபர்களின் நிபுணத்துவம் மற்றும் பயிற்சியின் நடைமுறை பொருத்தத்தைப் பாராட்டினர்.தொடர்ந்து, பல்கலைக்கழக துணை வேந்தர், இணைப் பயிற்சி இயக்குநர் அனிஷ் குப்தா ஆகியோர் சான்றிதழ் வழங்கினர்.