| ADDED : நவ 18, 2025 05:47 AM
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலையில், சுப்ரமணிய பாரதியார் தமிழ்மொழி மற்றும் இலக்கியப்புலம் சார்பில் தமிழகப் புலவர் குழுவின் 118ம் கூட்டம் மற்றும் தமிழறிஞர் விசுவநாதமின் 127ம் பிறந்தநாள் விழா நடந்தது. பல்கலைக்கழக கலை மற்றும் பண்பாட்டு உறவுகளின் இயக்குநர் கிளமெண்ட் லுார்து தலைமை தாங்கினார். புல முதன்மையர் சுடலைமுத்து வாழ்த்தி பேசினார். துறைத் தலைவர் கருணாநிதி வரவேற்றார். பேராசிரியர் ரவிக்குமார் ஒருங்கிணைத்தார். தமிழகப் புலவர் குழு உறுப்பினர் முனைவர் வீரமணி எழுதிய 'முத்தமிழ்க் காவலரின் தமிழகப் புலவர் குழு அமைப்பும், பணிகளும்' என்ற நுால் வெளியிடப்பட்டது. தமிழகப் புலவர் குழுவி ன் செயலாளர் மணிமேகலை கண்ணன் சிறப்புரை ஆற்றினார். மூத்த உறுப்பினர்கள் சேதுராமன், நீதிபதி பாஸ்கரன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத் தில் அழகப்பன், மறைமலை இலக்குவ னார், பாலசுப்ரமணியம், சாரதா நம்பி ஆரூரன், வளன் அரசு, பேராசிரியர் உலகநாயகி பழனி, வீரமணி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். துணைச்செயலாளர் ஸ்ரீ காந்த் நன்றி கூறினார். கூட்டத்தில், தமிழுக்கும், தமிழருக்கும் பாதுகாவலராகத் திகழ்ந்த விசுவநாதம் பெயரில் திருச்சியில் உள்ள மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் அவரது சிலையை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.