உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் உண்ணாவிரதம்

ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் உண்ணாவிரதம்

புதுச்சேரி : பணிஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். புதுச்சேரி பணி ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் இணைந்து நேற்று மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை எதிரில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.சம்மேளன பொது செயலாளர் செல்வம் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத் தலைவர் திலகம் தலைமை தாங்கினார். செயலாளர் தமிழரசி, உஷா, விக்டோரியா முன்னிலை வகித்தனர். கடந்த 35 ஆண்டுகளாக பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு பண பலன்கள் இல்லாமல் இருக்கிறது. பல முறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை கண்டித்தும், கோரிக்கை நிறைவேற்ற கோரி ஊழியர்கள் நேற்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். போராட்டத்தில், சம்மேளன ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜன், நிர்வாகிகள் புகழேந்தி, கணேசன், அருள்தாஸ், பூங்கோதை பரமேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி