மேலும் செய்திகள்
வயிற்று வலி தொழிலாளி தற்கொலை
01-Nov-2025
புதுச்சேரி: பாலித்தீன் கவரால் முகத்தை மூடி ஓய்வு பெற்ற தபால் துறை ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். முதலியார்பேட்டை எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் ராஜன், 72; ஓய்வு பெற்ற தபால் துறை ஊழியர். வியிற்று வலியால் அவதிப்பட்ட ராஜன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். வயிற்று வலி அதிகமான விரக்தியில், முகத்தை பாலித்தீன் கவரால் சுற்றி, நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கிய நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், இறந்துவிட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
01-Nov-2025