உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பணி நீக்க ஊழியர்கள் முதல்வருடன் சந்திப்பு

பணி நீக்க ஊழியர்கள் முதல்வருடன் சந்திப்பு

புதுச்சேரி : பொதுப்பணித்துறையில் வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் வேலை கேட்டு சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சட்டசபை வெளியில் காத்திருந்தனர்.புதுச்சேரி பொதுப்பணித்துறையில் கடந்த 2009 ம் ஆண்டு பணி அமர்த்தப்பட்ட 2,600 ஊழியர்களை, கோர்ட் உத்தரவின் படி பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் முதல்வர் ரங்கசாமி பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் சம்பளத்துடன் மீண்டும் பணி வழங்கப்படும் என்றார்.இதையடுத்து நேற்று 500க்கும் மேற்பட்ட பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சட்டசபையில் நேற்று மாலை 4 மணி முதல் காத்திருந்து, மாலை 6.30 மணிக்கு முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மீண்டும் வேலை கேட்டு பேசினர். அப்போது முதல்வர் ரங்கசாமி பொதுப்பணித்துறையில் 2009ம் ஆண்டு பணி அமர்த்தப்பட்ட 8 பேருக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளது. இதற்கான தீர்ப்பு வந்த பிறகு பணி வழங்குவது குறித்து தெரிவிக்கிறேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை