மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
22 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
22 hour(s) ago
புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விபத்துகளில் சிக்கி உயிரிழப்பவர்கள் மற்றும் காயம் அடைபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.கடந்த ஆண்டில் மொத்தம் 1,285 விபத்துகள் நடந்துள்ளது. இதில், 125 பேர் உயிரிழந்துள்ளனர். 317 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்; 1,230 பேர் லேசான காயம் அடைந்துள்ளனர்.முந்தைய 2022ம் ஆண்டில் நடந்த மொத்த விபத்துகளின் எண்ணிக்கை 1,167 ஆகும். அவ்வாண்டில் விபத்துகளில் சிக்கி 98 பேர் உயிரிழந்தனர். 420 பேர் படுகாயமும், 1,030 பேர் லேசான காயமும் அடைந்தனர்.முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டில் 27 பேர் கூடுதலாக உயிரிழந்துள்ளனர். கடந்த 2021ம் ஆண்டில் விபத்துகளில் சிக்கி 104 பேர் இறந்தனர். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் விபத்துகளில் 327 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.சின்னஞ்சிறிய யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது, விபத்துகளின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கவலை அளிப்பதாக உள்ளது. காரணம் என்ன?
போக்குவரத்து விதிகளை காற்றில் பறக்கவிட்டு வாகனம் ஓட்டுவது சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது. குறிப்பாக, அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவது, டூ வீலரில் செல்லும்போது ெஹல்மெட் அணியாதது, வாகனம் ஓட்டும்போது மொபைல் பயன்படுத்துவது, கவன குறைவாகவும், அலட்சியமாகவும் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட காரணங்களால் விபத்துகள் அதிகளவில் நடக்கிறது. என்ன செய்ய வேண்டும்?
வாகனம் ஓட்டுபவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை அரசு தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும்.மேலும், புதுச்சேரியில் உள்ள சாலைகளை அகலப்படுத்தவும், புதிய புறவழிச்சாலைகள், புதிய மேம்பாலங்கள் அமைக்கும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். பிளாட்பாரங்களை விரிவுப்படுத்தவும் நடவடிக்கைகள் தேவை.தேவையான இடங்களில் சாலைகளை கடப்பதற்கு நடை மேம்பாலங்கள் கட்டவும், 'சப்-வே' அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடும் அபராதம் விதிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
22 hour(s) ago
22 hour(s) ago