உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருக்கனுார்: திருக்கனுார் சுப்ரமணிய பாரதி மேல்நிலைப் பள்ளியில், தேசிய மாணவர் படை, சமுதாய நலப்பணித் திட்டம் மற்றும் சாரண-, சாரணியர் இயக்கம் சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளியின் முதல்வர் சம்பத் தலைமை தாங்கி, பேரணியை கொடியசைத்து துவங்கி வைத்தார். துணை முதல்வர் சுசீலா சம்பத் முன்னிலை வகித்தார். நிர்வாக இயக்குனர் ஹரிஷ்குமார் வரவேற்றார். முன்னதாக, பள்ளியின் முதல்வர் சம்பத் சாலை விதிகள் குறித்தும், அதனை சரியாக கடைப்பிடித்தால், தேவையற்ற சாலை விபத்துகளை தவிர்க்கலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் துவங்கிய விழிப்புணர்வு பேரணி காந்தி நகர், பிள்ளையார் கோயில், கடைவீதி மற்றும் வணிகர் வீதி வழியே மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில், பொதுமக்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக்கிய சாலை சந்திப்புகளில் மாணவர்களின் நாடகம், நடனம், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தன. பள்ளியின் நிர்வாக இயக்குனர் மோகன்குமார் நன்றி கூறினார். பேரணிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் பொறுப்பாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ