மேலும் செய்திகள்
கத்தியுடன் திரிந்த இருவர் கைது
05-Mar-2025
புதுச்சேரி : மங்கலம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ஏம்பலம் சாலையில் உள்ள சாராயக்கடை அருகே 2 பேர் அவ்வழியாக செல்வேரை கத்தியை காட்டி மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்ட இருவரும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி, விசாரித்தனர். அவர்கள், கரிக்கலாம்பாக்கம் சேகர் மகன் விநாயகமூர்த்தி, 35; சுப்புராயலு மகன் ரோஸ் அய்யனார், 25, என்பதும், இருவரும் பிரபல ரவுடியான ஜோசப்பின் கூட்டாளிகள் என்பதும், அவர்கள் மீது புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதிகளில் கொலை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.இருவரும் தங்களது வழக்கு செலவிற்காக பொது மக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 2 கத்திகளை பறிமுதல் செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே, இருவரும் போலீசாரிடம் இருந்த தப்பி ஓட முயன்றபோது, கீழே விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
05-Mar-2025