உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் 5 பேரிடம் ரூ. 1.47 லட்சம் அபேஸ்

புதுச்சேரியில் 5 பேரிடம் ரூ. 1.47 லட்சம் அபேஸ்

புதுச்சேரி : புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி கும்பலிடம் 5 பேர் ரூ.1.47 லட்சம் இழந்தனர்.புதுச்சேரி, புதுக்குப்பம், நல்லவாடு அஞ்சல் பகுதியை சேர்ந்தவர் விஜய்குமார். ஆன்லைனில் தங்கும் விடுதியை தேடினார். அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் தங்கும் விடுதியை முன் பதிவு செய்ய பணம் செலுத்த வேண்டுமென தெரிவித்தார்.இதை நம்பிய விஜய்குமார் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 650 ரூபாய் அனுப்பி ஏமாந்தார். வில்லியனுாரை சேர்ந்த அரவிந்தன் என்பவரை தொடர்பு கொண்ட நபர், வீட்டில் இருந்தபடி, ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து, அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறினார். இதைநம்பிய அரவிந்தன் 24 ஆயிரத்து 900 ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார்.இதேபோல், பாகூரை சேர்ந்த கீர்த்தனா 5 ஆயிரம், சிவபிரகாசம் 5 ஆயிரம், முத்தியால்பேட்டை சேர்ந்த உபாகாரமேரி 3 ஆயிரத்து 735 ரூபாய் என, மொத்தம் 5 பேர் 1 லட்சத்து 47 ஆயிரத்து 285 ரூபாயை ஆன்லைன் மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர்.இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை