உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரூ. 5 லட்சம் ‘குட்கா’ பறிமுதல் பாகூர் அருகே 2 பேர் கைது

ரூ. 5 லட்சம் ‘குட்கா’ பறிமுதல் பாகூர் அருகே 2 பேர் கைது

பாகூர்: பாகூர் அருகே ரூ. 5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர். புதுச்சேரியில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த சிறப்பு அதிரடி படை மற்றும் போதை தடுப்பு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மறுபுறம் சட்டம் ஒழுங்கு போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு, அவ்வப்போது கைது நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பாகூர் சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் நேற்று மாலை சோரியாங்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள பெட்டிக்கடைகளில் போலீசார் சோதனை நடத்தினர். குருவிநத்தம் பகுதியை சேர்ந்த கலைமணி என்பவரது கடையில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. அவரிடம் விசாரணையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 400 கிலோ எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட  ஹான்ஸ், கூல்லீப், விமல் பாக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு  ரூ. 5 லட்சம் ஆகும். இது தொடர்பாக பாகூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கலைமணி, சூர்யா ஆகியோரை கைது செய்தனர். இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலப்பட்டு மத்திய சிறையில் நேற்று அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி