5 பேரிடம் ரூ. 86 ஆயிரம் அபேஸ்
புதுச்சேரி: புதுச்சேரியில், 5 பேரிடம் 86 ஆயிரம் ரூபாய், மோசடி செய்த குற்றவாளிகளை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் பழைய மொபைல் போன் வாங்குவதற்கு இணையதளத்தில் தேடினார். அதில், பயன்படுத்திய, ஐ போன் விற்பனைக்கு உள்ளதாக வந்த விளம்பரத்தை பார்த்தார். அந்த நபரை தொடர்பு கொண்டு, அவர் கேட்ட 30 ஆயிரம் ரூபாயை அனுப்பி ஏமாந்தார். தவளக்குப்பத்தை சேர்ந்தவர் கிள்ளி வளவன். இவரை தொடர்பு கொண்ட நபர், குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக பேசினார். முன்பணம் அனுப்ப வேண்டும் என, கூறியதை தொடர்ந்து, 31 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார். அதே போல், லாஸ்பேட்டையை சேர்ந்த சாமிகண்ணு, 15 ஆயிரம், கருவடிக்குப்பம் கமல்ராஜ் 3,700, நெல்லித்தோப்பு ராஜசேகரன் 6,300 ரூபாய் ஏமாந்தனர். இதுகுறித்து, 5 பேர் கொடுத்து, புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.