மேலும் செய்திகள்
சைபர் கிரைம் கும்பல் ரூ.4.46 லட்சம் மோசடி
02-Jul-2025
புதுச்சேரி :புதுச்சேரியை சேர்ந்த பெண்ணுக்கு பரிசு பொருள் அனுப்பியுள்ளதாக கூறி ரூ.9.14 லட்சத்தை மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளது.புதுச்சேரி, சூரியகாந்தி நகரை சேர்ந்த பெண் ஒருவர் பேஸ்பக் மூலம் அடையாளம் தெரியாத நபருடன் நட்பாக பேசி வந்தார். அந்த நபர் பெண்ணிற்கு, கூரியர் மூலம் பரிசு பொருட்கள் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார். அதற்கு, அடுத்த நாள் அந்த பெண்ணை தொடர்பு கொண்ட மற்றொரு மர்ம நபர், சுங்கத்துறை அதிகாரி பேசுவதாக கூறி, உங்களுடைய பெயருக்கு பரிசு பொருள் ஒன்று வந்துள்ளதாகவும், அதனை டெலிவரி செய்வதற்கு செயலாக்க கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள் செலுத்த வேண்டும் என, தெரிவித்துள்ளார். இதை நம்பிய அப்பெண் ரூ.9 லட்சத்து 14 ஆயிரத்து அனுப்பி ஏமாந்தார்.இதேபோல், கவுண்டன்பாளையத்தை சேர்ந்த பெண் 20 ஆயிரம், சாரத்தை சேர்ந்த ஆண் நபர் 2 ஆயிரத்து 500, சுத்துக்கேணியை சேர்ந்த நபர் 7 ஆயிரத்து 200, ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த பெண் 20 ஆயிரத்து 300, வில்லியனுாரை சேர்ந்த நபர் 21 ஆயிரம், ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த பெண் 75 ஆயிரம், ஒயிட் டவுனை சேர்ந்த நபர் 10 ஆயிரம், வினோபா நகரை சேர்ந்த நபர் 20 ஆயிரத்து 300 என 9 பேர் மோசடி கும்பலிடம் 10 லட்சத்து 90 ஆயிரத்து 300 ரூபாய் ஏமாந்துள்ளனர்.இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
02-Jul-2025