உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரூ. 94 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் வில்லியனுார் தொகுதியில் துவக்கம்

ரூ. 94 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் வில்லியனுார் தொகுதியில் துவக்கம்

புதுச்சேரி : வில்லியனுார் தொகுதியில், 94 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர், சாலை மேம்பாட்டு பணிகளை எதிர்க் கட்சித் தலைவர் சிவா துவக்கி வைத்தார்.புதுச்சேரி அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் வில்லியனூர் தொகுதி, உத்திரவாகினிப்பேட் பகுதியில் 35 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலைகள் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்டது. மேலும், பெரியபேட் கிராமத்தில் புதிதாக மனைப்பட்டா வழங்கிய பகுதிகளில், 59.28 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை மேம்படுத்தும் பணி மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.மொத்தம், 94.28 லட்சம் ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி பணிகள் நேற்று துவங்கின. இப்பணிகளை எதிர்க் கட்சித் தலைவர் சிவா துவக்கி வைத்தார். ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் இளங்கோவன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மேம்பாட்டு வரைநிலை கழக இயக்குநர் சிவகுமார், உதவிப் பொறியாளர் பக்தவச்சலம், இளநிலைப் பொறியாளர் முரளி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













புதிய வீடியோ