மேலும் செய்திகள்
காரைக்கால் தொழிலதிபரிடம் ரூ. 1.2 லட்சம் ‘அபேஸ்’
4 hour(s) ago
பராமரித்தல் மின்பிரிவு மையம் இடமாற்றம்
6 hour(s) ago
புதுச்சேரி: 'மத்திய அரசிடம் இருந்து ரூ.1,000 கோடிக்கும் அதிகமான சிறப்பு உள்கட்டமைப்பு நிதியை கவர்னர் பெற்றுத் தர வேண்டும்' என, தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்குமார் வலியுறுத்தி உள்ளார். சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, அவர், பேசியதாவது; புதுச்சேரி மாநிலம் மிகவும் கவலைக்கிடமான நிலத்தடி நீர் மற்றும் குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. கடல்நீர் ஊடுருவல், நகர்ப்புற விரிவாக்கத்தால் இயற்கை நீர் ஆதாரங்கள் அடைபட்டு, மழைநீர் நிலத்தடிக்குச் செல்வது வெகுவாகக் குறைந்து விட்டது. பாசன ஏரிகளும், 84க்கும் மேற்பட்ட முக்கியக் கால்வாய்களும் துார்வாரப்படாமல், ஆக்கிரமிப்புகளால் முழு கொள்ளளவை இழந்துள்ளது. மத்திய அரசின் மூலம் ரூ.1,000 கோடிக்கும் அதிக மான சிறப்பு உள்கட்டமைப்பு நிதியை கவர்னர் பெற்றுத் தர வேண் டும். தடுப்பு அணை களையும், நிலத்தடி நீர் மறுஊட்ட அமைப்புகளையும் உருவாக்க வேண்டும். கவர் னர், தனது நீர் மேலாண்மை அனுபவத்தையும் செல்வாக்கையும் புதுச்சேரியின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்த வேண்டும்' என்றார்.
4 hour(s) ago
6 hour(s) ago