உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சலானி ஜூவல்லரி தங்க, வைர நகை கண்காட்சி இன்று நிறைவு

சலானி ஜூவல்லரி தங்க, வைர நகை கண்காட்சி இன்று நிறைவு

புதுச்சேரி: புதுச்சேரியில் சலானி ஜூவல்லரியின் தங்க வைர கண்காட்சி, இன்றுடன் நிறைவு பெறுகிறது.சென்னை மற்றும் மதுரையில் இயங்கி வரும் சலானி ஜூவல்லரியின், கண்காட்சி நேற்று முன்தினம் புதுச்சேரி அண்ணாசாலை ஓட்டல் ரெசிடன்சியில் துவங்கியது. மூன்றாம் நாளான இன்று கண்காட்சி நிறைவு பெறுகிறது. கண்காட்சி காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடக்கிறது.இதில், மணமகள் திருமண நகைகள், தங்கம் மற்றும் வைரம் பதிக்கப்பட்ட லைட் வெயிட் நகைகள், பழங்கால தொன்மையுடன் பாரம்பரியத்தை உணர்த்தும் ஆன்டிக் நகைகள், தெய்வீகமான கோவில் நகைகள் என பல வகையான நகைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.இந்த வாய்ப்பை வாடிக்கையாளர்களும், பொதுமக்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும், என, உரிமையாளர் ஸ்ரீபால் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ