உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருப்பணிக்கு நிதியுதவி சம்பத் எம்.எல்.ஏ., வழங்கல்

திருப்பணிக்கு நிதியுதவி சம்பத் எம்.எல்.ஏ., வழங்கல்

புதுச்சேரி: முதலியார்பேட்டை பொது பிள்ளையார், சுப்ரமணியர் சுவாமி கோவில் திருப்பணிக்காக இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் நிதியுதவியை சம்பத் எம்.எல்.ஏ., வழங்கினார்.முதலியார்பேட்டை, புவன்கரே வீதியில் பொது பிள்ளையார், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருப்பணிக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, தொகுதி எம்.எல்.ஏ., சம்பத் தலைமை தாங்கி, அரசின் இந்து சமய அறநிலையத் துறை மூலம் 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார்.இதில், கோவில் சிறப்பு அதிகாரி வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை