இரும்பை கோவிலில் சாரதா நவராத்திரி விழா
புதுச்சேரி: இரும்பை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் சாரதா நவராத்திரி விழா நேற்று துவங்கியது. புதுச்சேரி - திண்டிவனம் சாலை, இரும்பை குபேர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் சாரதா நவராத்திரி விழா நேற்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது. சாரதா நவராத்திரி விழா வரும் 3ம் தேதி வரை நடக்கிறது. அதனையொட்டி, அம்பாளுக்கு தினசரி சிறப்பு அபிஷேகம், மாலை 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, இசை மற்றும் நாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும் 3ம் தேதி மாலை 6:00 மணிக்கு, அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் டிரஸ்ட் செய்துள்ளனர்.