| ADDED : நவ 24, 2025 05:47 AM
புதுச்சேரி: அய்யங்குட்டிபாளையம், கோபாலன் கடை சாலை, லட்சுமி நரசிம்மர் நகரில் அமைந்துள்ள 'சாய் கிருஷ்ணா' சத்திய சாய் சேவை மையத்தில், சத்ய சாய்பாபா 100வது பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, காலை ஓம்காரம், சுப்ரபாதம், சுவாமியின் பல்லக்கு ஊர்வலம் நடந்தது. பின் சத்ய சாய் சகஸ்ர நாம பாராயணம், நாராயண சேவை, அன்னதானம் நடந்தது. மாலை வேத பாராயணம், சாய் மாதா ஸ்வராலயாவின் இசை, குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், பஜனை மற்றும் மகா மங்கள ஆர்த்தி நடந்தது. தொடர்ந்து, ஏழைக ளுக்கு வஸ்திர தானம், மகளிர்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது. மேலும், சாய் சேவை மையத்தில் மகளிர்களுக்கான இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகள், குழந்தைகளுக்கான பால விகாஸ் (எ) நல் ஒழுக்க கல் வி பயிற்சி அளிக்க ப்பட்டது. ஏற்பாடுகளை சத்ய சாய் தமிழ்நாடு அறக்கட்டளை உறுப்பினர் கிஷோர் பூன்னமல்லி, சத்ய சாய் சேவா நிறுவனங்களின் புதுச்சேரி மாவட்ட தலைவர் மூர்த்தி செய்திருந்தனர்.