உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரதமருடன் பள்ளி மாணவிகள் கலந்துரையாடல்: நேரடி ஒளிபரப்பு கவர்னர், முதல்வர் பங்கேற்பு

பிரதமருடன் பள்ளி மாணவிகள் கலந்துரையாடல்: நேரடி ஒளிபரப்பு கவர்னர், முதல்வர் பங்கேற்பு

புதுச்சேரி : பிரதமர் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பை கவர்னர், முதல்வர் மாணவர்களுடன் பார்த்தனர். புதுச்சேரி மாணவி எழுப்பிய கேள்விக்கு பிரதமர் நரேந்திரமோடி பதில் அளித்தார்.பிரதமர் நரேந்திரமோடி மாணவர்களுடன் கலந்துரையாடும் பரிக் ஷா பே சர்ச்சா (தேர்வு பற்றி விவாதம்) என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பு, புதுச்சேரி பள்ளி கல்வித்துறை சார்பில் கம்பன் கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.கல்வித்துறை செயலர் ஆசிஷ் மாதவ்ராவ் வரவேற்றார். கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினர். சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், துணை சபாநாயகர் ராஜவேலு, பள்ளி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, துணை இயக்குநர் சிவகாமி, பல்வேறு அரசு பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.டில்லியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பிரதமர் நரேந்திரமோடியுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி காணொலி வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் 600 மாணவர்கள் கலந்து கொண்டனர்.பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி நன்றி கூறினார். ஏற்பாடுகளை மாநில திட்ட இயக்குனர் தினகர் தலைமையிலானஊழியர்கள் செய்திருந்தனர்.இந்நிகழ்ச்சியில்சேதராப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி தீபாஸ்ரீ, மாணவர் ரித்திஷ்வர் கலந்து கொண்டனர்.மாணவி தீபாஸ்ரீ, மாணவர்கள் கடினமாக படிக்கிறார்கள் என்ற நம்பிக்கை பெற்றோரிடம் எப்படி ஏற்படுத்துவது என கேள்வி எழுப்பினார்.அதற்கு பிரதமர் நரேந்திரமோடி பதில் அளித்து பேசுகையில், இந்த கேள்வி உள்ளே மற்றொரு கேள்வி உள்ளது. நம்பிக்கை இல்லாமை. நம்பிக்கை குறைபாடு எங்கிருந்து வருகிறது என ஆசிரியர்களும் மாணவர்களும் சிந்திக்க வேண்டும். இந்த நம்பிக்கை குறைபாடு நெடுஞ்காலமாக உள்ளது. ஏன் பெற்றோர் நம்ப மறுக்கின்றனர் என்பதை சிந்திக்க வேண்டும். மாணவன் தன் தாயிடம் ஒரு இடத்திற்கு செல்வதாக கூறிவிட்டு வேறு இடம் சென்று வரும்போதும், டி.வி. பார்க்க மாட்டேன் படிக்கிறேன் என கூறிவிட்டு, டி.வி. பார்த்து துாங்கும்போதும் பெற்றோருக்கு அவநம்பிக்கை ஏற்படுகிறது என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை