உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பள்ளி மாணவி பாலியல் விவகாரம்; மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

பள்ளி மாணவி பாலியல் விவகாரம்; மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

அரியாங்குப்பம்; தவளக்குப்பம், தானம்பாளையம் செயின்ட் ஜோசப் ஆங்கிலப் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு படித்த 6 வயது சிறுமியை பள்ளி ஆசிரியர் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். இதனால், ஆத்திமடைந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், பொதுமக்களுடன் சேர்ந்து, கடந்த 14ம் தேதி, பள்ளியில் இருந்த வாகனம், உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தினர். இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.அதனை அடுத்து, சிறுமிக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்திய வேதியியல் ஆசிரியர், முதலியார்பேட்டையை சேர்ந்த மணிகண்டன், 25, என்பவரை நேற்று முன்தினம் தவளக்குப்பம் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அனைத்து மீனவர்கள் பஞ்சாயத்தார்கள் சார்பில், நல்லவாடு கிராமத்தில், ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதில், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியருக்கு துாக்கு தண்டனையும், பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியரை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றினர்.புதுச்சேரி தமிழக பகுதியை சேர்ந்த 18 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல், புறக்கணித்தனர். நேற்று, இரண்டாவது நாளாக நல்லவாடு பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் புறக்கணித்தனர். பள்ளி வளாகம், தவளக்குப்பம், நல்லவாடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை