சோரப்பட்டு பாரதி பள்ளியில் அறிவியல் கண்காட்சி
திருக்கனுார் :சோரப்பட்டு பாரதி ஆங்கில உயர்நிலைப்பள்ளியில் கலை, அறிவியல் மற்றும் தனித் திறன் கண்காட்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிர்வாகி சம்பத் தலைமை தாங்கினார். தலைமையாசிரியை சுசீலா சம்பத் வரவேற்றார். ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அலுவலர் தனச்செல்வன் நேரு கண்காட்சியை துவக்கி வைத்து, பார்வையிட்டார். நிர்வாக இயக்குனர் ஹரிஷ் குமார் முன்னிலை வகித்தார். கண்காட்சியில், எல்.கே.ஜி., முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் 260க்கும் மேற்பட்ட படைப்புகள் காட்சிப் படுத்தப்பட்டன. கண்காட்சியை 15க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் பார்வையிட்டனர். கண்காட்சியில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த படைப்புகளுக்கு மாநில தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ரங்கநாதன், காசாளர் சிவசுப்ரமணியன், மதகடிப்பட்டு பாரத தேவி ஆங்கில உயர்நிலைப் பள்ளியின் நிர்வாகி இளமதியழகன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். பள்ளியின் நிர்வாக இயக்குநர் மோகன் குமார் நன்றி கூறினார்.