உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அரசு துவக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி

 அரசு துவக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி

புதுச்சேரி: கணபதிசெட்டிகுளம் அரசு துவக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது. கண்காட்சியை, வட்டம் 1 பள்ளி துணை ஆய்வாளர் அனிதா துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் முனியம்மாள் வரவேற்றார். எல்.கே.ஜி., முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், நுாற்றுக்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தி, பார்வையாளர்களுக்கு விளக்கம் அளித்தனர். தொடர்ந்து, உணவு திருவிழாவில், பெற்றோர்களின் பங்களிப்புடன், மாணவர்கள் சிறுதானிய உணவுகள் மற்றும் காய்கறிகள் பழங்களை காட்சிப்படுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் ஜனார்த்தனன், சரஸ்வதி, சந்தியா, கஜலட்சுமி, வடிவுக்கரசி, சாமுண்டீஸ்வரி, சுதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி