மேலும் செய்திகள்
அரசு பள்ளிகளில் அறிவியல் கண்காட்சி
05-Nov-2025
திருக்கனுார்: பி.எஸ்.பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி, விளையாட்டு சீருடை மற்றும் காலணிகள் வழங்கும் விழா நடந்தது. ஆசிரியர் மஞ்சுளா வரவேற்றார். தலைமை ஆசிரியர் சித்ராதேவி தலைமை தாங்கினார். பள்ளி துணை ஆய்வாளர் புவியரசன் மற்றும் தனியார் நிறுவன பொறுப்பாளர்கள் பிராங்கிளின், ஸ்ரீதர் அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டனர். தொடர்ந்து, மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை மற்றும் காலணிகள் வழங்கினர். கண்காட்சியில் அறிவியல், கணிதம், புவியியல் மற்றும் சிறுதானிய உணவு வகைகள் தொடர்பான 50க்கும் மேற்பட்ட படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ராஜேஸ்வரி, சுகுணா, லலிதா மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
05-Nov-2025