வாசவி பள்ளியில் அறிவியல் கண்காட்சி
புதுச்சேரி: வாசவி இன்டர்நேஷனல் பள்ளியில், நடந்த அறிவியில் கண்காட்சியில் மாணவர்களின் பல்வேறு படைப்புகள் இடம் பெற்றன.கண்காட்சியை, சேர்மன் வேணுகோபால், பள்ளி துணை முதல்வர் செந்தில்ராஜ் ஆகியோர் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக, மருத்துவர் சஞ்சீவி ரங்கநாதன், மாணவர்கள் தொழில்நுட்பத்தில் எவ்வாறு முன்வர வேண்டும் என விளக்கம் அளித்தார். வ.உசி., பள்ளி ஓய்வு பெற்ற பேராசிரியர் சத்தியமூர்த்தி, திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஓய்வு பெற்ற விரிவுரையாளர் மரியா, தலைமை ஆசிரியர் மதியழகன் ஆகியோர் மாணவர்களின் அறிவியல் படைப்புகளை தேர்வு செய்தனர். அதனை அடுத்து, கண்காட்சியில், சிறந்த படைப்புகளுக்கு பரிசு வழங்கி மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். கண்காட்சியில் இடம்பெற்ற மாணவர்களின் படைப்புகளை பெற்றோர் உள்ளிட்டோர் பார்வையிட்டு சென்றனர்.