அறிவியல் நாடக விழா –2026
புதுச்சேரி: பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில், மாணவர்களின் அறிவியல் சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில், இந்திரா காந்தி அரசு மேல்நிலைப் பள்ளியில், ‘மாநில அளவிலான அறிவியல் நாடக விழா 2026’ நடந்தது. விழாவில், சிறப்பு விருந்தினராக அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு, மாணவர்களின் அறிவியல் சிந்தனை, படைப்பாற்றல் கலை திறனை கண்டு பாராட்டினார். விழாவில், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.